Posts

Showing posts from July, 2017

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு இத்தனை நாட்கள் தேவையா???

    தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வுகள் அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும் ஏற்படும்,' என கல்வியாளர்கள் கருதுகின்றனர். கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றது முதல் மாணவர் நலன், அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் வகையில் வெளியாகும் புதிய அறிவிப்புகள் அனைத்து தரப்பினரையும் வரவேற்பதாக உள்ளன. மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை போக்க, பொதுத் தேர்வுகளில் மாநில ராங்க் பெற்ற மாணவர் பட்டியலை வெளியிடாதது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக பாடத்திட்டம், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் முன்கூட்டியே வெளியீடு போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 16ல் துவங்கி ஏப்.,20ல் முடிகிறது. இதன் முடிவு மே 23ல் வெளியாகும். பிளஸ் 1 தேர்வு மார்ச் 7 ல் துவங்கி ஏப்.,16 முடிகிறது. தேர்வு முடிவு மே 30ல் வெளியாகும். பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ல் துவங்கி ஏப்.,6 முடிகிறது. இதன் முடிவு மே 16ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஐந்து பாடங்களே உள்ள, ஏழு தேர்வுகள் உள