Ïu£il g£l« bg‰W TET k‰W« KJfiy TRB-š bt‰¿ bg‰w MÁça®fns cõh®!

(e‹¿ TeacherTn.com)


Posted: 22 Dec 2012 09:32 AM PST

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது , "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.

 இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நேற்று (21.12.2012) இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் TET விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும்  உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும்,  100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 13 ஆசிரியர்களுக்கும் 13 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து TET நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு. வெங்கடராமன்  உத்தரவிட்டார்.

 

Comments

Popular posts from this blog

Tech Easy Guides

வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) - 12 STD

Public Question Papers