அனுப்புநர்:
      அ. பிரபாகர் (12PG02140348),
      4/194B, OKP பில்டிங்,
      அண்ணா நகர்,
      ரெட்டிப்பட்டி அஞ்சல்,
      நாமக்கல் – 2.
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
      சென்னை.

மதிப்பிற்குரிய அம்மா,
பொருள் : 2011-2012ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை
ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கள் கையால் பணி நியமன ஆணை பெற்ற எனக்கு இரட்டைப்பட்டம் காரணமாக பணி இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை – சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் தற்பொழுது எனக்கு முதுகலை ஆசிரியர் பணியும் இட ஒதுக்கீடு ஆணையும் வழங்குதல் – சார்பாக.
      பார்வை :1) சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடிதம் ந.க.எண்
6923/ஆ1/2012, நாள் 11.12.2012
               2) சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடிதம் ந.க.எண்
6923/ஆ1/2012, நாள் 27.12.2012
   3) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி)
செயல்முறைகள் ந.க.எண் 97658/டபிள்யு3/இ2/2012, நாள் 12.12.2012
   4) சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு – MP No. 1 /2013 IN WA. 529/2013,
நாள் 10.04.2013
     2011-2012ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்து, பார்வை 1ல் காண் கடிதம் வாயிலாக பெறப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பார்வை 3ல் காண் எனக்கு முதுகலையாசிரியராக (ஆங்கிலம்) தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது.
இரட்டைப்பட்டம் காரணமாக பார்வை 2ல் காண் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடிதத்தில் முதுகலை ஆசிரியர் நேரடி பணி நியமனத்திற்கான இறுதிப்பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.
தற்பொழுது பார்வை 4ல் வாயிலாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இரட்டைப்பட்டம் பெற்ற எனக்கு பணிநியமனம் வழங்க எந்தவித தடையும் இல்லை என்பதனை அறிந்தேன்.
தங்களின் ஆட்சியில் எண்ணற்ற ஆசிரியர்களையும் பல்வேறு பணிநியமனங்களையும் வழங்கி வரும் தாங்கள் என்னையும் கருணையோடு பரிசீலித்து எனக்கு முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) பணிநியமனம் வழங்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

இப்படிக்கு
                             

(A.  PRABHAKAR - 12PG02140348)

Comments

Popular posts from this blog

Tech Easy Guides

TECH EASY QUIZZES

Public & PTA Question Papers