2019 ல் நடந்த முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் பணி நியமனதிற்கு தாமாதம் எற்டுத்தியதாக நீதிபதி கண்டித்து வழக்கை முடித்து வைத்தார்.

முதுகலை கணினி பயிற்றுநர் (நிலை-I)🖥️

இரு நபர் ஆணையத்தின் தீர்ப்பு விவரம் பின்வருமாறு,⚖️📓

இரு நபர் ஆணையம் தலைமை:

1. நீதிபதி.திரு. ஆதிநாதன் (ஒய்வு)

2. திரு.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, IPS., IG (ஒய்வு)


🔖நாங்கள் இருவரும்(Two Man Committee) திறந்த மனதுடன் தேர்வில் தோல்வியடைந்த நபர்களின் புகார்களையும், கோரிக்கைகளையும் பரிசீலித்தோம். ஆனால் அளிக்கப்பட்ட புகார்களில் உள்ள உண்மையும், நேர்மையும் இறுதி வரை எங்களால் மெய்ப்பிக்க இயலவில்லை.

🔖அவர்களின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையிலும், செவிவழிச் செய்திகளாகவும் மட்டுமே இருக்கின்றன.

🔖குற்றச்சாற்று செலுத்தியவர்கள் தேர்வை ஒரு மையத்திலும், குற்றச்சாட்டை வேறு ஒரு மையத்தின் மீதும் வைக்கின்றனர். மேலும் அந்த குற்றச்சாட்டு அனைத்தும் உண்மையற்றவை, ஊகத்தின் பெயரிலும், அதீத கற்பனையின் விளைவாக உருவாக்கப்பட்டவை என விசாரணையில் தெரிய வருகிறது.

🔖இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்தபோது ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது, இவை அனைத்தும் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்கின்ற அடிப்படையில் நடத்திய விளையாட்டு (அ) நாடகமே என தெரிய வருகிறது.

🔖இவர்கள் சுமத்திய எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் குறைந்தபட்ச அடிப்படை ஆதாரம் கூட இல்லை.

🔖இந்தக் குற்றச்சாட்டுகளால் அவர்கள் வைக்கும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற வாதம் அடிப்படை முகாந்திரம் அற்றவை என நிரூபணம் ஆகிறது.

🔖தேர்வில் தோல்வியுற்றவர்கள் வைத்த வாதம் குற்றச்சாட்டுகளை முழு மனதுடன் ஆராய்ந்தபோது அவற்றின் உண்மை தன்மை இல்லாததை கண்ட நாங்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை கண்டு எங்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

🔖ஆகவே நடத்தப்பட்ட முதுகலை கணினி பயிற்றுநர் ( நிலை-1) தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை.

🔖எனவே கடுமையாக படித்து வெற்றி பெற்று பணியில் உள்ள முதுகலை கணினி பயிற்றுநர் நிலை-I நியமனம் செல்லும். மேலும் நிறுத்தி வைத்த பணியிடங்களை உடனடியாக 2 வார காலத்திற்குள் நியமிக்க உத்தரவு.

🔖தோல்வி அடைந்த தேர்வர்களின் அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை எனவே அவை எந்த நிபந்தனையுமின்றி நிராகரிக்கப்படுகிறது.

இப்படிக்கு,

இரு நபர் ஆணையம்.☺️

Comments

  1. உண்மை நிலைநாட்டப்பட்ருக்கிறது

    ReplyDelete
  2. Finally it's proven that truth always triumphs

    ReplyDelete
  3. வாய்மையே வெல்லும்

    ReplyDelete
  4. Sir..thank you so much for your great effort... Whether the above given notes is enough for preparation or need to prepare more apart from the given notes... Whether the notes covered the whole unit.... Pls reply sir..
    Thank you.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Tech Easy Guides

வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) - 12 STD

Public Question Papers